ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று சூப்பர் 8 முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி களமிறங்கிய நிலையில் அவர் முதல் 3 போட்டியிலும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற  விராட் கோலி தற்போது குறைந்த ரன்கள் எடுத்து அவுட் ஆவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க கூடாது என பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு தற்போது சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, விராட் கோலி தடுமாறுவதை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் தற்போது தடுமாறினாலும் சூப்பர் ‌8, அரை இறுதி போட்டி மற்றும் இறுதிப் போட்டி ஆகியவற்றில் அசத்துவார். நாட்டுக்காக விளையாடும் எந்த ஒரு வீரருக்கும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். எனவே அவருக்கு ஆதரவு கொடுத்தாலே போதும். மேலும் நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்து பேசியுள்ளார்.