இந்திய அணிக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் என்ற பெருமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வை சேரும். இவருடைய தலைமையில் இந்திய அணி முதல்முறையாக கடந்த 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றார். இதற்கு முன்பு கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பையையும் இந்திய அணி எம்.எஸ் தோனி தலைமையில் வென்றது. இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும் கபில் தேவ் மற்றும் எம்.எஸ் தோனி வரிசையில் தற்போது ரோகித் சர்மாவும் இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்து நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.