
தமிழகத்தில் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் வெளிப்பொருத்தும் மற்றும் உள்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. நீல புரட்சி என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தில் இந்த மானியம் வழங்கும் திட்டம் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக முதல்வர் கடந்த மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் ஆயிரம் நாட்டு படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இயந்திரம் ஒன்றின் விலை 1.20 லட்சம் என்ற அடிப்படையில் 40 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான நிர்வாக ஒப்புதல் மானிய தொகையாக 4.80 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.