தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் ஃபார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவிற்கு நாட்டு நாட்டு பாடலின் ஸ்டெப்பை  நடிகர் ராம்சரண் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வருகிற மார்ச் 12-ஆம் தேதி 95-வது ஆஸ்கர்விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் 23 பிரிவு பிரிவுகளில் விருது வழங்கப்பட உள்ளது. அதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலானது சிறந்த பாடலுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மேலும் சிறந்த பாடலுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியான இந்த படத்தை ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.ஆர்.டி நடிப்பில் இயக்குனர் எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார்.