ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடித்த நிலையில் ஒரு இடத்தில் மட்டும் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு விபத்தில் 71 பேர் உயிரிழந்த நிலையில் 180 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது சல்மான், ரகுமான், சைப், அஸ்மி ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஷாபாஷ் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் அனைவரும் மேல்முறையீடு செய்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அவர்கள் அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்ததோடு ஷாபாஸின் விடுதலையையும் உறுதி செய்தது. இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கை ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் தற்போது அனைவரையும் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இவர்கள் 4 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.