இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்தில், இன்று கொழும்பில் நடைபெற்ற போட்டியில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீரர்கள் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

இந்த நடவடிக்கை, கடந்த வாரம் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் எடுத்த அஞ்சலி நடவடிக்கையை ஒட்டியது. புதன்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தின் போதும், சனிக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஆட்டத்தின் போதும் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து துக்கம் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 சுற்றுலாப் பயணிகள் பலியான துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (TRF) பொறுப்பு ஏற்றுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து உலக நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன