நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல நிர்வாகிகள் விலகினர். அதோடு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் விலகினர். சமீபத்தில் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர்  விலகினர். இப்படி சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி வரும் நிலையில் அவர்கள் தங்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை எனவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் சீமான் தங்களை மதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதன்படி விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.