தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சீமான், திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி என்று பெரியார் அசிங்கப்படுத்த முடியாத தாமரை அமைச்சர் ரகுபதி செய்துவிட்டார். திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி என்ற அமைச்சர் ரகுபதியை கண்டித்து ஒரு திமுக தலைவர்களும் பேசவில்லை. வாடகை வாயிகளும் பேசவில்லை. சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் திரும்புவதை தடுக்க புதுமைப்பெண் மற்றும் தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகின்றது.

கல்லூரி மாணவ மாணவிகள் சீமானை நோக்கி ஓடுவதை பார்த்து அஞ்சுகின்றனர். நாம் தமிழர் கட்சி வாக்குகளில் குறைந்தது 30 லட்சம் வாக்குகள் சீமானுக்கு செல்வதை டேபிளில் இருக்கும் சர்வே சொல்கிறது. அவர்கள் ஓட்டை பெறுவதற்கு மாத மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். தற்போதைய இளம் தலைமுறையினர் திராவிட கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி விட்டதாக கூறிய சீமான், தமிழகத்தை சுத்தம் செய்ய நாம் தமிழர் கட்சி ஆட்சியை கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை இளையோர் கூட்டம் உணர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.