
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ராணா டகுபதி. இவர் நடிகை திரிஷாவை காதலிப்பதாக பல வருடங்களுக்கு முன்பாக பேசப்பட்ட நிலையில் இருவரும் திருமணம் கூட செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. நடிகை திரிஷா 40 வயதை கடந்த போதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதாவது அவருக்கு விவாகரத்து செய்வதில் உடன்பாடு கிடையாது. இதன் காரணமாக தன்னைப் புரிந்து தன் விருப்பப்படி இருக்க அனுமதிக்கும் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக வாழ்க்கைத் துணையை நிதானமாக தேர்வு செய்வேன் என்று திரிஷா கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரானா டகுபதி திரிஷாவுடன் டேட்டிங் செய்தது குறித்து கரண் ஜோகர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். இதில் நடிகர் ராணா டகுபதி மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக த்ரிஷாவும் நானும் நட்பில் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் டேட்டிங் செய்ததாகவும் ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை எனவும் ராணா டகுபதி கூறியுள்ளார். மேலும் திரிஷா தனக்கு நல்ல தோழி கூறிய நடிகர் ராணா டகுபதி அவருடன் டேட்டிங் செய்ததையும் கூறியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி உள்ளது.