
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நானும் ஐயா ரஜினிகாந்த் நேரில் சந்தித்தோம். நாங்கள் இருவரும் இரண்டே கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் என்ன பேசினோம் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை அவருக்கு இல்லை.
உங்கள் வீட்டில் காது குத்து முதல் கொண்டு எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவரை அழைத்து வீட்டில் வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நானும் அவரும் ஒருமுறைதான் ஒன்றாக நின்றோம். ஆனால் அதுக்கே ஐயோ என்று குதிக்கிறார்கள். இதற்கு காரணம் அவர் திரை உலகின் சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு சூப்பர் ஸ்டாரர்களும் ஒன்றாக சந்தித்துக்கொண்டவுடன் அனைவரும் பயந்துவிட்டார்கள் என்று கூறினார்.