தெற்கு டெல்லியில் பிரபலமான சரோஜினி நகர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த மார்க்கெட் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் நிலையில் தற்போது அங்கு நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இரண்டு பெண்கள் ஒரே உடைக்காக பயங்கரமாக சண்டை போட்டனர்.

ஒரு உடைக்காக ஒரு பெண் மற்றொரு பெண்ணை அறைந்த நிலையில் பின்னர் அவரும் பதிலுக்கு அடித்தார். உடனடியாக சண்டை முற்றிய நிலையில் தலை முடியை பிடித்து இழுத்து ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டு ரோட்டில் உருளாத குறையாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களை அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்த முயன்ற போதிலும் சண்டை முடிவில்லாமல் சென்றது. இது  தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.