
கன்னட திரையுலகில் இருந்து பிரிவோம் சந்திப்போம் எனும் விஜய் தொலைக்காட்சி தொடர் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ரச்சிதா. முதல் தொடரே இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில், அடுத்து சரவணன்-மீனாட்சி தொடர்களில் நாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஓரளவு மக்களின் ஆதரவை பெற்றார்.
கடந்த சில வருடங்களாகவே ரச்சிதா மற்றும் அவரது கணவர் தினேஷ் இரண்டு பேரும் பிரிந்து வாழ்கின்றனர். எனினும் அவர்கள் இணைந்துவிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும் ரச்சிதா கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் மோசமாக மெசேஜ் செய்கிறார் என போலீஸில் புகார் கொடுத்தார். இந்நிலையில் ரச்சிதா Black & White-ல் ஒரு புகைப்படம் வெளியிட்டு, நான் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துள்ளதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றும் தனக்கு நேர்ந்த விஷயங்களில் இருந்து பாடங்கள் கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இப்பதிவு ரசிகர்களிடம் பேசப்பட்டு வருகிறது.