
இனி இயக்கத்தில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்த போகிறேன் என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் ரொம்ப இயல்பா இருக்கிற ஒரு கேரக்டர். எனக்குள்ள நடிப்பெல்லாம் கிடையவே கிடையாது. நான் என்னவோ அதை அப்படியே வெளிப்படையாக பேசிடுவேன். நான் ஆல்ரெடி நடித்த படங்களின் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நடிப்பேனே தவிர புதிதாக இனி நடிக்க போவதில்லை. இயக்கத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியுள்ளார்.