ராஜஸ்தான் மாநிலம் மிதோரா என்னும் கிராமத்தில் பாபுராம் பில்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாநில அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் அவர் அந்த  சான்றிதழை  ரத்து செய்வதற்காக அதிகாரிகளிடம் அணுகியபோது அவர்கள் அலட்சியத்துடன் மறுத்துவிட்டனர். இதனையடுத்து பாபுராம் தான் உயிரோடு இருப்பதை நிரூபிப்பதற்காகவும் அந்த சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்வதற்காகவும் பல வழிமுறைகளை செய்துவந்தார்.

இருப்பினும்  அதிகாரிகள் இதைப்பற்றி கவனத்தில் எடுக்காததால் அவர் செல்போன் டவர் மீது ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தினார். பின்பு கையில் கத்தி மற்றும் பெட்ரோல் பாட்டிலுடன் அருகிலுள்ள பள்ளிக்குள் சென்று அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளார். இதுபற்றி பள்ளியின் மேலாளர் செல்போனில் தொடர்பு கொண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் காவல் துறையினர் பாபுராமிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது  அவர் தனது இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்காகத்தான் இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார். மேலும் பாபுராம் கூறியதை வைத்து காவல்துறையினர்  விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.