
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் நிஷாந்த் திரிபாதி என்ற 41 வயது அனிமேட்டர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி ஒரு ஹோட்டலுக்கு சென்ற நிலையில் அங்கு குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. அதாவது அவருடைய மனைவி அபூர்வா மற்றும் அவருடைய அத்தை தான் தற்கொலைக்கு காரணம். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தான் எழுதிய தற்கொலை கடிதத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த கடிதத்தை அவர் தன் மனைவிக்காக எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அன்பே அபூர்வா நான் உயிரோடு இருக்கும்போதும் சரி இறந்த பிறகும் சரி எப்போதும் உன்னை நேசிப்பேன். நீ இந்த கடிதத்தை படிக்கும் நேரத்தில் நான் உன்னை விட்டு போயிருப்பேன். நான் இறப்பதற்கு நீயும் அத்தையும் மட்டும் தான் காரணம். தயவுசெய்து என் அம்மாவிடம் மட்டும் சென்று விடாதே. ஏற்கனவே அவர் உன்னால் மிகவும் மனம் உடைந்து விட்டார் என்று எழுதியுள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்ற பலகையை ஹோட்டலில் தான் புக் செய்திருந்த அறைக்கு வெளியே வைத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாக அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவரின் தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.