
அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் உலக தலைவர்கள் பலரும் கூடினர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் வெள்ளை மாளிகை விழாக்கோலம் பூண்டது. டொனால்ட் ட்ரம்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் துணை அதிபராக ஜேடி வான்ஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பேசிய ட்ரம்ப் அமெரிக்காவிற்கு இனி பொற்காலம் தொடங்கி விட்டதாக கூறினார். அதன் பிறகு பலம் மிகுந்த, வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவது தான் நம்முடைய கடமை. அமெரிக்காவுக்கு என்னுடைய ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் முன்னுரிமை வழங்கப்படும். இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக விரைவில் அமெரிக்கா மாறிவிடும்.
நான் கொலை தாக்குதலிலிருந்து பிழைத்த நிலையில் நான் தப்பித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வருவதற்கு கடவுள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நொடி முதல் அமெரிக்காவில் சுதந்திரம் பிறந்து விட்டது. சட்டவிரோத குடியேற்றம் உடனடியாக அமெரிக்காவில் தடுத்து நிறுத்தப்படும். மேலும் இனி ஆண் பெண் என்ற இருபாலினம் மட்டும்தான் அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படும் என்றும் பாலினமாற்று அறுவை சிகிச்சை மற்றும் ராணுவத்தில் மாற்றி பாலினத்தவர் செய்வதற்கு தடை போன்ற உத்தரவுகளில் இன்று கையெழுத்திட்டார். அதோடு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து இரண்டாவது முறையாக அமெரிக்கா வெளியேறுவதாகவும் ட்ரம்பு கையெழுத்து போட்டு உள்ளார்.