
NZ வீரர் மார்ட்டின் கப்டில் இந்திய ரசிகர்களை வம்பிழுக்கும் வகையில் இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்து அணி இடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.
அதில் தோனியை கப்டில் ரன் அவுட் ஆகினார். இதன் காரணமாக அவரை இந்திய ரசிகர்கள் திட்டி தீர்ப்பார்கள். இதனை கிண்டல் செய்யும் வகையில் அவர், என்னை வெறுப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டேன் என்று பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.