
நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, தமிழ் தேசியம் திராவிடம் இன்னபிற ஜாதியம் இப்படி எல்லையில்லா உலகில் உள்ள அனைத்து பிரிவினர்களிடமும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைக்கு குரல் தரும் சாமான்யன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல், தமிழ் பற்றி ஆதரவாக சீனு ராமசாமி ட்வீட் செய்திருந்ததை சிலர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘யதார்த்த கலைச்சிற்பி பாலுமகேந்திரனின் பள்ளியின் கடைசி இருக்கை மாணவன். மக்கள் திலகத்தின் வள்ளல் குணத்தை போற்றுபவன். தமிழ் மொழிக்கு புகழ் செய்வோரை வாழ்த்துபவன்’ என கூறியுள்ளார்.