ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா  அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுகுறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கிறோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.  தற்போது பெரிய அளவு வெப்பம் இல்லை. ஆடுகளம் பெரிய அளவு மாறாது என்று நினைக்கிறேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ரிஷப் பண்ட், “லக்னோ அணியின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்று கேட்டதற்கு நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறமாட்டேன்.

எங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்கிறோம். ஒரு கேப்டனாக என் அணி வென்றால் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் அதை பிளேயிங் லெவன் வைத்து தான் விளையாடுகிறோம்” என்று கூறியுள்ளார். அவர் முதலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறமாட்டேன் என்று சொன்னது தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் லக்னோ அணியின் உரிமையாளர் எப்போதுமே தன்னுடைய அணி கேப் டனோடு நல்ல உறவில் இருப்பதில்லை. ஏற்கனவே கே.எல்  ராகுலுடன் பிரச்சனையை சந்தித்த நிலையில் தற்போது ரிஷப் பண்ணிடமும் அதே போல நடந்து கொள்கிறார். இதனால் தான் ரிஷப் பண்ட் அப்படி சொன்னாரா? என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்