
தமிழ் சினிமாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இந்த படத்திற்கு பிறகு ரோஜாவனம், வெற்றிக் கொடி கட்டு, திருட்டுப் பயலே, சந்திரமுகி போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்தார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் அதன் பின் நடிகை மாளவிகா சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
இந்நிலையில் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணத்தை நடிகை மாளவிகா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எனக்கு சிறு வயது முதலில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் தான் மாடலிங்கில் சேர்ந்து விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதன்பின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் பல பட வாய்ப்புகள் கைவண்ணம் இருந்தது. ஆனால் கர்ப்பமானதால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. அப்போது படங்களில் நடிக்க வாங்கியிருந்த முன் பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டேன். மேலும் அதன் பிறகு என்னால் சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விலகி விட்டேன் என்று கூறியுள்ளார்.