தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவர் அஞ்சாதே, நந்தலாலா மற்றும் யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் படங்களை இயக்குவதோடு மட்டுமின்றி படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது டிராகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அப்போது அவரிடம் திரையில் அவருடைய புகைப்படத்தை காண்பித்து இவரை பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள் என்று கேட்டனர். அதற்கு சினிமாவை விட்டு மிஷ்கின் விரைவில் விலகுவார் என்று கூறினார். இவர் தற்போது பிசாசு 2 மற்றும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வருகிறார். மேலும் விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் என்று அவர் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.