
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, ஓபிஎஸ் அவர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலகி இருப்பதால் தான் தனித்தன்மையோடு செயல்பட்டு இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மதுரையில் இருக்கின்ற உதயகுமார் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அம்மா ஓபிஎஸ் மீது வெறுப்பாக இருந்தார்கள் என்று அவர் சொல்வது சுத்தமான பொய். மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டது. அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்ற உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆராய வேண்டும்.
அதை விட்டுவிட்டு ஓபிஎஸ் மீது தேவையில்லாமல் பாய்வது சரி இல்லை. 2001 முதல் ஜெயலலிதா நம்மை விட்டு பிரிகின்ற 2016ஆம் ஆண்டு வரை மட்டுமல்லாமல் அதற்குப் பின்னரும் அமைச்சராகவும் மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர் தான் ஓபிஎஸ். தேர்தலில் தோல்வியை கண்டிராத தலைவர் ஓ பி எஸ் நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ராமநாதபுரம் போனதுதான் தப்பாகிவிட்டது. அதுவரை அவர் தோல்வி என்பதை அறியவில்லை. ஜெயலலிதா நம்பிக்கையோடு வைத்திருந்த ஒரே தலைவராக ஓபிஎஸ் செயல்பட்டார் என்று புகழேந்தி ஓபிஎஸ்ஐ புகழ்ந்து பேசி உள்ளார்.