
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது, நான் நடப்பதை எல்லாம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது .அதிமுகவில் ஒரு சாதாரண ஏழை கூட எம்எல்ஏஆகலாம். எம்பி ஆகலாம். இது நம்முடைய கட்சிக்கு உள்ள முறை.
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள். நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக்கி இருக்க மாட்டேன். அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டார்கள். இனி கட்சி அழிந்து விடும் என்று கூற முடியாது என்று கூறியிருக்கிறார்.