
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்றும் அப்போது நான் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொய் என்று கூறி நீ சிரி பார்க்கலாம் என்று சவால் விடும் விதமாக பேசியுள்ளார். இது பற்றி ஒரு பொது மேடை நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, நான் அப்பவும் சொல்கிறேன் இப்பவும் சொல்கிறேன். நான் சொன்னதை கேட்டு நீ சிரித்தாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரும்போது நீ சிரிடா பார்க்கலாம். அப்போது ஒரு தடவை ஆமைக்கறி என்று சொல்லுடா பார்க்கலாம். அரிசி கப்பல் என்று சொல்லு பார்க்கலாம். நீ ஒரு நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்திருந்தால் அன்னைக்கு ஒரு தடவை சொல்லுடா பார்க்கலாம். ஏகே 74 என்று அன்னைக்கும் ஒரு தடவை சொல்லு பார்க்கலாம். என்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு அதே பழக்கம் என் தலைவனிடமும் இருக்கு.
அதாவது தட்டில் சாப்பாட்டை போட்டு சாப்பிட்ட பிறகு நல்லா இருக்கா என்று கேட்பார். அப்போது நல்லா இருக்கு மிகவும் சுவையாக இருக்கு என்று நான் கூறுவேன். அவர் உடனே இதை அங்கேயும் போய் சொல்லணும் என்பார். அதற்காகத்தான் என் தலைவன் என்னை பக்கத்தில் வைத்திருந்தார். என் தலைவன் யார் என்னுடைய இனம் எப்படிப்பட்டது. எங்கள் போராட்டம் எதற்கு தொடங்கியது. இந்த தேசிய இனத்திற்கு இந்த தேசத்தின் தேவை என்ன. அதற்காக நாங்கள் கொடுத்த விலை என்ன. நீ ஒரு பணத்தை கொடுத்து விலையை கொடுத்து பொருளை வாங்குவாய் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் ஆகும் போது நான் சொன்னதெல்லாம் பொய் என்று அப்போது என் முன்னாள் சொல்லி சிரிங்கள் பார்க்கலாம் என்று சீமான் சவால் விடும் விதமாக பேசிய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram