
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயின் ஆக நடித்து வரும் நிலையில் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், கட்டாக்குஸ்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தற்போது கூறியுள்ளார். அதாவது நட்பு வட்டாரத்தில் திருமணம் செய்து கொண்ட பலர் தற்போது நிம்மதியாக இல்லை எனவும் அதனால் திருமணம் செய்து கொண்டு நிம்மதியை தொலைக்க விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
அதாவது ஹலோ மம்மி பட நிகழ்ச்சியில் பேசிய அவர் என்னுடைய அம்மாவின் விருப்பத்திற்காக மேட்ரிமோனியல் அக்கவுண்ட் இருக்கிறது. ஆனால் எனக்கு திருமணம் செய்வது கொள்வதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியது அவருடைய ரசிகர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.