தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதனை ஏற்று தன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துவார். இவர் நடித்துள்ள மகாராஜா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி மகாராஜா படத்தை நான் பார்க்க மாட்டேன் என கூறியுள்ளார். அதாவது அந்த படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் இருப்பதால் அந்த படத்தை பார்க்க மாட்டேன் என கூறியுள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய நிலையில் அவர் டப்பிங் யூனியிலிருந்து நீக்கப்பட்டு அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சின்மயி வெளியிட்டுள்ள பதிவுக்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.