அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி வருகிறது. அதாவது ஹோட்டல் ஒன்றில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தன்னுடைய தளத்தில் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார் .

மேலும் அதில் தான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் என்று ராகுல் காந்தியை குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவுக்காக அதிமுக சார்பில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இது அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் விளக்கமளித்த நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுக தலைமை நேரடியாக தலையிட்ட காரணத்தால், அந்த பதிவை இன்று நீக்கியுள்ளார்.