
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் கேபிஒய் பாலா. இவர் வெள்ளித்திரையில் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தன்னுடைய முழு நேர வேலையாக வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் ஒரு வாகன ஷோரூம் திறப்பு விழா நடைபெற்ற நிலையில் அந்த விழாவில் நடிகர் கேபிஒய் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் குறைந்து வருவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் கடந்த இரு சீசன்களாக நான் அந்த நிகழ்ச்சியில் இல்லை எனவும் தனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறினார்.
பின்னர் தனக்கு ஏராளமான உதவிகள் செய்ய வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் சொல்லிவிட்டு உதவி செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது எனவும் செய்த பிறகு சொல்லும் சாதாரண ஆள்தான் என்றும் கூறினார். அதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்தும் அதில் கலந்து கொள்வீர்களா என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பற்றி பேசும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. அதற்கான வயதும், தகுதியும், அறிவும் எனக்கு கிடையாது. நான் விஜயின் மாநாட்டில் கலந்துகொள்ளும் அளவிற்கு பெரிய ஆள் கிடையாது. அதே நேரத்தில் நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும் கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து கேபிஒய் பாலா தக்லைப் பதில் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.