இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி இடது கை தொடக்க வீரர் ஷிகர் தவான். இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஷிகர் தவான் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அவர் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னுடைய உடல் இப்போதும் கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையான விஷயங்களை கொடுக்கும் அளவுக்கு கட்டுப்பாடுடன் இருக்கிறது.

நான் என்னுடைய முடிவுகளில் எளிமையாக இருக்கிறேன். இருப்பினும் என்னிடமிருந்து கிரிக்கெட்டை ஒருபோதும் பிரிக்க முடியாது. எனவே என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறேன் என்று கூறினார். மேலும் மீண்டும் நண்பருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன் என ஷிகர் தவான் கூறியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.