தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய விருப்பப்படி உயர் கல்வியை தேர்ந்தெடுக்கவும் விண்ணப்ப படிவங்களை நிரப்பவும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 2024-2025ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி இந்த பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி நிறுவனங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் டெண்டர் கோரியுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 12ம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.