
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு தரப்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மூலமாக ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் மூலமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு அரசு உதவி வருகின்றது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி 25888 பாலிடெக்னிக் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பல்வேறு துறைகளில் வேலை பெற்றுள்ளனர். ஓலா எலெக்ட்ரிக், அக்செஞ்சர், அமேசான், அசோக் லேலண்ட், போஸ்க், டெய்கின், HCL, L&T உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர்.