தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி ஆலோசகர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. இதன் மூலமாக பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய விருப்பப்படி உயர் கல்வியை தேர்ந்தெடுக்கவும் விண்ணப்ப படிவங்களை நிரப்பவும் உரிய வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த  திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு அரசுப் பணியாளர் தேர்வாணையப் பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சி வசதிகள் மற்றும் யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்கான பொருட்களைப் பெற உதவி வழங்கபடுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக வருடம்தோறும் 1000 சிவில் சர்வீசஸ் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 25,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை கிடைத்திருப்பதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.