தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு ஜெயலலிதா விசுவாசத்தை பொருத்தவரையில் நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். அதிமுக கட்சியில் யார் பிரச்சனையை உருவாக்கினர் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவை எதிர்த்து போராடக்கூடிய சக்தி வேண்டுமென்றால் அதிமுகவில் பிரிந்து கிடப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறி என்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதாக ராஜன் செல்லப்பா கூறும் நிலையில் அதற்காக என்னை 6 மாத காலம் அமைதியாக இருக்க சொல்கிறார்.

எனக்கு யாருடைய சிபாரிசும் தேவையில்லை நான் யார் வீட்டு வாசலிலும் போய் நிற்கவில்லை. எனக்காக யாரும் பரிந்துரை செய்ய வேண்டாம். என்னை அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் சென்று கேட்கவில்லை. என் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க சொன்னது ஜெயலலிதா தான் என்று கூறினார். மேலும் அதிமுகவில் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி  இணைவதற்கு தயாராக இருப்பதாக முன்னதாக ஓபிஎஸ் அறிவித்த நிலையில் ஆறு மாத காலம் அமைதி காத்தால் மீண்டும் இணைத்துக் கொள்கிறோம் என்று ராஜன் செல்லப்பா கூறி இருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் ஓபிஎஸ் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்