நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது வென்றது. மூன்று விக்கெட் வீழ்த்திய  முகமது சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகு சிராஜ் பேசுகையில், “நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். ஏழு வருடங்கள் நான் இங்கு இருந்தேன் .ஜெர்சி சிவப்பு நிறத்தில் இருந்து நீல நிறமாக மாற்றினேன் .உணர்ச்சிவசப்பட்டேன்.

ஆனால் பந்து கிடைத்தது. எனக்கு நன்றாக இருந்தது. நான் ரெனால்டோவின் ரசிகன். அதனால் கொண்டாட்டம். தொடர்ந்து விளையாடி வருகிறேன். இடைவேளையின் போது என்னுடைய தவறுகளை சரிசெய்து என் உடற்தகுதியை மேம்படுத்த முயற்சித்தேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.