கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருடைய தோழி பவித்ரா கவுடா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் பவித்ராவுக்கு ரேணுகா சாமி என்ற இளைஞர் ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.‌ இதனால் அந்த வாலிபரை கொடூரமாகக் கொண்டு கால்வாயில் வீசிய நிலையில் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தற்போது பவித்ரா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதாவது எனக்கு ஆபாச மெசேஜ் வந்தது தொடர்பாக என்னுடைய உதவியாளர் பவனிடம் கூறினேன். அவர்தான் இது பற்றி தர்ஷனிடம் கூறினார். இதனால் நான் ரேணுகா சாமியை பிடித்து மிரட்டுவார்கள் என்று நினைத்தேன். நானும் தர்ஷனும் கடந்த 8-ம் தேதி ‌ சென்று ரேணுகா சாமியை மிரட்டினோம். அப்போது நான் அவரை செருப்பால் அடித்தேன். அதன் பிறகு நானும் அவரும் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம். ஆனால் அவரை கொலை செய்வார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேலும் இந்த கொலைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.