மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் சந்திரசேகரன்(75). இவர் தன்னை வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களில் செங்கல் சூளை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். நேற்று சந்திரசேகரன் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான சிட் பண்ட் நிறுவனத்திற்கு சென்று ஒரு அடையாள அட்டையை காண்பித்து உங்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்க இருப்பதாக கூறினார்.

இதனையடுத்து சோதனை நடக்காமல் இருக்க பணம் தாருங்கள் என கேட்டதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரசேகரன் மற்றும் அவரது கார் ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது வருமானவரி துறை அதிகாரி எனக் கூறி சந்திரசேகரன் தொழிலதிபர்களிடமிருந்து பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் சந்திரசேகரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.