நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த விஷயம் பெரும் பேசு பொருளாக சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க இவர்கள் தங்கள் குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் இவ்வளவு வளர்ந்து விட்டார்களா என்று யோசிக்க வைக்கும் வகையில் இருவரின் புகைப்படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். இதனைத்தொடர்ந்து சமீபகாலமாகவே டுவிட்டர் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்த நயன்தாரா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தைகளுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)