
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரியாமணி. இவர் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை பிரியா மணி தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார். அப்போது தன்னுடைய முதல் சம்பளம் பற்றி பேசியுள்ளார்.
அதாவது பிரியா மணி தான் நடித்த முதல் படத்திற்கு வெறும் ரூ.500 தான் சம்பளமாக பெற்றதாக கூறினார். தற்போது நான் கோடிகளில் சம்பளம் பெறுவதாக கூறுகிறார்கள். இருப்பினும் நான் மாடலிங் துறையில் முதன்முதலாக பெற்ற சம்பளத்தை தான் எப்போதும் நினைத்துப் பார்ப்பேன். மேலும் நான் முதல் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதோடு மேக்கப் இல்லாமல் நடிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.