
அசுரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அருமையான வசனம் அமைந்திருக்கும் அதில் இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க விரும்பினால் நன்றாக படித்து முடித்து ஒரு நல்ல அதிகாரத்தில் சென்று உட்கார், அதன் பிறகு உனக்கு இவர்கள் செய்ததை நீ யாருக்கும் செய்யாதே என்ற வசனம் கல்வியின் முக்கியத்துவத்தையும், பிறரிடத்தில் எப்படி அன்பு காட்டுவது, பிறரை எப்படி சமமாக நடத்துவது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்.
அந்த வசனத்திற்கு ஏற்ப தற்போது படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள் கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எனது தந்தை இறப்பிற்கு ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விஏஓவிடம் கையெழுத்து வாங்க வேண்டியது இருந்தது.
அந்த ஒரு கையெழுத்திற்காக என்னை ஒரு வாரத்திற்கு மேல் அலையவிட்டார்கள். நான் நடந்தே தான் செல்வேன். நான் வசிக்கும் பகுதிக்கும் விஏஓ அலுவலகத்திற்கும் மிக நீண்ட தூரம். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த ஒரு காரணத்திற்காகவே நான் படித்து விஏஓ ஆக ஆசைப்படுகிறேன்.
எனக்கு நடந்தது போல் யாருக்கும் நடக்க விட மாட்டேன். தன்னிடம் வருபவர்களை தீர விசாரித்து உடனடியாக அவர்களை அலையவிடாமல் கையெழுத்து போட்டுக் கொடுப்பேன் என்று கூறியிருப்பார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.