பீகார் மாநிலம் தர்பங்காவில் ராம்நவமி விழாவின் போது நிகழ்ந்த ஒரு சம்பவம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராமநவமி ஊர்வலத்தை காண அருகிலுள்ள ஒரு மாடியில் கூடியிருந்த பெண்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரையொருவர் தலைமுடியை இழுத்து, அடித்துக்கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

மாடியிலிருந்து ஊர்வலம் பார்க்க முயன்ற பெண்கள் இடையே கம்பளம் விரிப்பது தொடர்பாக சண்டை வெடித்தது. அதாவது ஒரு மாடியில் பெண்கள் கூடி ராம்நவமி ஊர்வலத்தை பார்த்து கொண்டிருந்தபோது, ஒருவர் கம்பளத்தை விரித்த இடத்தில் மற்றொருவரும் அமர முயன்றதாக கூறப்படுகிறது. இதிலிருந்து சிறிய விவாதம் உருவானது. ஆனால், அது சின்ன சின்ன தகராறுகளாக மாறி, ஒரு பெரிய சண்டையாக வளர்ந்தது.

அந்த மாடியில் நடந்த சண்டையில், பெண்கள் ஒருவரையொருவர் தலைமுடியை இழுத்து அடித்து, கத்திக்கொண்டே சண்டை செய்தனர். இதையடுத்து சூழலை சமாதானப்படுத்த ஒரு பாடல் ஒலிக்கவிடப்பட்டது. பின்னர் போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி, கட்டுப்படுத்தினர். இது போன்ற நிகழ்வுகள் விழாக்களில் ஏற்படக்கூடிய தடங்கல்களைக் காட்டும் வகையில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.