தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவியில் பிரபல நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். இவர் காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றுள்ளார். கடைசியாக தெலுங்கில் சங்கராந்தி வஸ்துனம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவரிடம், ரசிகர் ஒருவர், நீங்கள் இப்போது இருக்கும் கலர் ஒரிஜினலா? இல்லை படத்தில் இருக்கும் கலர் ஒரிஜினலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,  நான் வெள்ளையாக இல்லை. நம்ம ஊர் கலர்ல தான் நான் இருக்கேன். இது நான் என்னுடைய ரியல் கலர். இது தான் அழகு மற்றும் கலையாக இருக்கும் என்று பேசியுள்ளார்.