
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை கூறிய பாத்திரம் ஆக நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை விமர்சிப்பவர்களின் உண்மையான குறி திமுக தான். திருமாவளவன் கிடையாது. திமுகவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று என்னும் சக்திகள் என்னை ஒரு தூதாக பயன்படுத்தி அதை சாதிக்க நினைக்கிறது என்று கூறினார். மேலும் முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது கண்துடைப்பு கிடையாது.
அவருக்கு மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும். அவர் பேசுவதை பார்க்கும்போது அவருக்கு வேறு ஏதோ சீக்ரெட் திட்டம் இருப்பது போல் தோன்றுகிறது. அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லவே கூடாது. அது மிகவும் தவறு. தொடர்ந்தவர் இப்படி பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ஆதவ் அர்ஜுனா ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போது திமுக அழுத்தம் கொடுத்ததால் தான் திருமாவளவன் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் மது ஒழிப்பு மாநாடு நடந்தபோது திமுக தலைவர்கள் திருமாவளவனை மதிக்கவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.