பெங்களூரில் கடந்தாண்டு ஆத்திரத்தில் ஒரே மகளை கொலை செய்த தாய் பத்மினி ராணி என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கணவரை இழந்த பத்மினி ராணி மகளை பாசமாக வளர்த்துள்ளார். அவரது மகள் பொது தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றதாக தாயிடம் பொய் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஒரு பாடத்தில் தோல்வி. அதற்கு நீங்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து பத்மினி ராணி தனது மகளின் தோழியிடம் விசாரித்தார். அப்போது தனது மகள் 4 பாடத்தில் தேர்ச்சி பெறாதது தெரியவந்தது.

இதனால் கோபத்தில் சமையல் கரண்டியால் மகளை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பத்மினி ராணியின் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பத்மினி ராணிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.