
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.
அது மட்டுமல்லாது அதிக அளவு செவ்வளநீர் மரங்களை வளர்க்க வேண்டும் என்று முக்கிய குறிப்பாக எழுதி தோப்பு உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தாங்கள் யார் என்று கண்டுபிடிக்க முயன்றால் தங்களது திருட்டு தொடரும் என்றும் தோப்பு உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.