
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஒரு பரபரப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதாவது சாட்டை துரைமுருகனின் youtube சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
அந்த youtube சேனலில் வரக்கூடிய கருத்துக்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவைகள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்பதால் அதற்கு நாம் தமிழர் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அதற்கு எந்த விதத்திலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பேற்காது என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரைமுருகன் விலகுகிறாரா என்று பரபரப்பு எழுந்துள்ளது.