நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என பலரும் விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி அருள் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா என்பவர் 7 வருடங்களாக நாம் தமிழர் கட்சிக்காக உழைத்த நிலையில் அவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று கட்சியின் பொருளாளர் சுரேஷ், துணை பொதுச்செயலாளர் வேடியப்பன், இணைச்செயலாளர் முருகேசன், பாப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்த பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் விலகி உள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் விலகியதற்கான காரணம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, முதலில் சீமான் கொள்கை மற்றும் கோட்பாடுகள் பற்றி அறிவித்த போது நாம் தமிழர் கட்சியில் நாங்கள் இணைந்தோம்.

ஆனால் தற்போது அவர் எல்லாவற்றையும் மறந்து விட்டு ஏற்கனவே ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கிற தலைவர்கள் பற்றி கொச்சையாக பேசுகிறார். அதோடு ஜாதியை ஒழிக்கிறேன் என்று சில ஜாதிகளை மிகவும் கீழ்த்தரமான முறையில் அவர் விமர்சிக்கிறார். நாம் தமிழர் கட்சியை நாங்கள் கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வரும் நிலையில் அடுத்தடுத்து சீமான் பேச பேச அனைத்து முயற்சிகளும் வீணாகி பிரிவினைவாதம் மட்டும் தான் ஏற்படுகிறது. மேலும் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அவரை பார்த்து நாங்கள் விலகவில்லை எனவும் எங்கள் தலைவர் சீமான் கூட ஒரு நடிகர் தான் எனவும் எனவே விஜயை விட நாங்கள் அரசியலில் சீனியர்கள் தான். இதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததால் விலகவில்லை. நாங்கள் விலகியதற்கு சீமான் மட்டும் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.