நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் யூடியூபில் பதிவேற்றிய வீடியோக்களை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடியோ பதிவுகளையும் சமர்ப்பிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி சம்மன் அனுப்பிய நிலையில்  வீடியோக்களை தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு பணம் திரட்டி தந்ததாக எழுந்த புகாரில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது.