
மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே ஜி.ஆர் நகர் விரிவாக்க பகுதி உள்ளது. இங்கு மைக்கேல் ஸ்டாலின் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு வெல்டிங் பட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் புதூர் பகுதி பொறுப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மைக்கேல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மைக்கேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தற்கொலை செய்து கொண்ட மைக்கேலின் கண்களை தானம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அவருடைய கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.