
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் கூல் சுரேஷ். இவர் பொதுவாக படங்கள் ரிலீஸ் ஆகும்போது ப்ரமோஷன் செய்வதற்காக வித்தியாசமான கெட்டப்பில் வருவார். இல்லையெனில் வித்தியாசமான செயல்களை செய்து கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில் நேற்று தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார்.
அதாவது திரு மாணிக்கம் படத்தின் ப்ரோமோஷனுக்காக கூல் சுரேஷ் இதை செய்துள்ளார். அவர் சாட்டையால் அடிக்கும் போது படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோரின் பெயர்களை கூறினார். பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட விவகாரம் பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது நடிகர் கூல் சுரேஷ் அதே பாணியில் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நாம எது பண்ணாலும் உலகமே நம்மை திரும்பிப் பார்க்கணும் என்ற வகையில் கூல் சுரேஷ் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டுள்ளார். அவர் ஒவ்வொரு முறை தன்னை அடிக்கும் போதும் திரு. மாணிக்கம், லிங்குசாமி என்று கூறினார். இந்த திரு மாணிக்கம் படத்தில் சமுத்திரகனி, அனன்யா, பாரதிராஜா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட நிலையில் அதேபோன்று தற்போது கூல் சுரேஷும் சாட்டையால் அடித்துக் கொண்டது பேசும் பொருளாக மாறி உள்ளது.