அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வீரர் பட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விமான நிலையத்திற்கு புதன்கிழமை இரவு அனுப்பப்பட்டார்கள். அதன்படி இப்போது அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் துள்ளல் நடனத்தோடு  உள்ளே சக விண்வெளி வீரர்கள் அவர்களை ஆரத் தழுவி வரவேற்றுள்ளனர். அப்போது ஆர்வம் மிகுதியின் காரணமாக சுனிதா வில்லியம்ஸ் நடனம் ஆடி உள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஆனது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.